தமிழகத்தின் கடல் மாட்சியையும், கலைமாட்சியையும் ஒருவாறு விளக்கிக் காட்டும் நோக்கத்துடன் எழுந்தது இந்நூல், இதில் அடங்கிய இருபத்தொரு கட்டுரைகளுள் முதல் மூன்று கட்டுரைகளும் இலங்கை வானொலி நிலையப் பேச்சுகள், 'சென்னைக் கடற்கரை' கல்கித் தீபாவளி மலரில் வந்த கட்டுரை. ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வெளியிடப்பட்டது. 'பரங்கியர் போன வழி', 'மேலைநாட்டு அறிஞரின் கலைத்தொண்டு' என்னும் கட்டுரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மலரிலும், 'நான் கண்ட சொழவந்தான்' சுதேசமித்திரன் பொங்கல் மலரிலும் வெளிவந்தவை. 'கலைச்சொல்லாக்கம்' கோவையில் நிகழ்ந்த சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம். உள்ளுரையில் உடுக்குறியிட்ட கட்டுரைகள் சென்னை வானொலி நிலையப் பேச்சுகள்.
Be the first to rate this book.