முஸ்லிம் உம்மாவின் அகில நாகரிக நோக்கு என்ற விவகாரம் பற்றிய முழுமையான, ஆழமான, சிந்தனா மீளாய்வொன்றை இந்நூல் முன்வைக்கிறது. அந்த அகில நாகரிக நோக்கின் வரலாற்றுச் செல்நெறியை அது ஆய்வு செய்கிறது. ஆரம்ப முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான முக்கிய காரணியாக அந்நோக்கு எவ்வாறு இருந்தது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. அந்த அகில நாகரிக நோக்கைப் பீடித்த ரோகங்களையும், அவற்றின் காரணமாக இன்று அது எதிர்கொண்டுள்ள அபாயங்களையும் கூட விவரிக்கிறது. இந்த வகையில், அல்குர்ஆனிய அகில நாகரிக நோக்கைப் புரிந்து கொள்ளவும், தெளிவுபடுத்தவும் நவ உலகுக்கு அதனை மீட்டெடுக்கவும் இந்நூல் பங்களிப்புச் செய்கிறது.
அப்துல் ஹமீத் அபூ சுலைமான் மக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர். இஸ்லாமியச் சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவராகவும், மலேசியாவின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிறுவனராகவும் பணிப்பாளராகவும் (1988-1999) இருந்தவர். தனது கலாநிதிப் பட்டத்தை 1973ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றிய துறையில் பெற்றுக் கொண்டார். இஸ்லாமிய சிந்தனை சார்ந்த பல்வேறு புலங்களில் பல ஆய்வுகளையும் நூல்களையும் இவர் ஆக்கியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:
1. சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு: சிந்தனைக்கும் இஸ்லாமிய முறைவழிக்குமான புதிய செல்நெறிகள்.
2. முஸ்லிமின் சிந்தனா நெருக்கடி.
3. வன்முறையும் அரசியல் போராட்டத்தை நிர்வகித்தலும்: கொள்கைக்கும் நடைமுறைத் தெரிவுக்கும் இடையில் இஸ்லாமிய நோக்கு.
4. முஸ்லிமின் நாட்டசக்தி மற்றும் மனப்பாங்கு நெருக்கடி.
5. நவீன இஸ்லாமிய சீர்திருத்தம்.
Be the first to rate this book.