‘அக்கானி’, மேற்கு குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல். ஏழ்மையில் கிடக்கும் மக்களைக் கல்வி எப்படி எழுச்சி கொள்ளச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வியோடு சேர்ந்து மார்க்சியமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் எப்படி மக்களை எழுச்சிகொள்ள வைக்கின்றன என்றும் சொல்கிறது.
*****
அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகள் அந்த மக்களிடையே எப்படிச் சமத்துவத்துக்கு வழிகோலுகின்றன என்றெல்லாம் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர். இந்த நாவலின் மிகச் சிறப்பான அம்சம் அதில் பயன்படுத்தப்படும் மொழி. வாசிக்க வாசிக்க அது வியப்பூட்டுகிறது. தமிழ் நாவல் உலகத்தில் இந்த நாவல் நீண்ட காலம் வியந்து பேசப்படும். – பொன்னீலன்
Be the first to rate this book.