* சிறந்த கவிதை நூல் - 2019 @ ஆத்மாநாம் அறக்கட்டளை விருது
தாமிரபரணிக் கரையின் செம்மண் புழுதியெல்லாம் பரவியிருக்கும் அக்காள்களின் துயரப் பெருங்கதைகளை, மென் சந்தோஷங்களை, உயிர் எழுத்துக்களை தலைப்பாகவும், பின் மெய்யெழுத்துகள், பின்னர் உயிர்மெய் எழுத்துகள் என்று தலைப்பின் வழியே அக்காள்களின் உணர்வுகளை காட்சிப்படுத்துயிருக்கிறார் கவிஞர் வெய்யில். கோணங்கியின் நூல்வாழ்த்து தொகுப்பின் உக்கிரப்பக்கங்களில் நுழைந்து வந்ததைக் காட்டுகிறது. நூல் திறப்பிலேயே நமது கொடுப்பினையற்ற கையறு நிலை புலப்படுகிறது.
எத்தனை விதமான அக்காள்கள்.. காதல் முகிழும் பருவ வயதினள், சுற்றம் ஏற்காத காதல்வயப்பட்டவள், ரத்த பந்தங்களின் கொலைவாளுக்கு பலியானவள், புதிதாய் திருமணம் ஆனவள், கணவனைப் பிரிந்தவள், கணவனை இழந்தவள்.. அவரவருக்கு சொல்வதற்கு ஆயிரம் கதைகள்.. அதைக் கணவரின் கல்லறையில் இருந்து எடுத்து வந்த முயலிடம் சொல்கிறாள் ஒருத்தி. பேசும் குருவியை தோழியாக்கியிருக்கிறாள் மற்றொருத்தி. காதல் நாய்களுக்கு மறைவிடம் சொல்லித்தரும் கருணைகொண்டிருக்கிறாள் ஒருத்தி. புத்தி காணாத சிறுவனான தம்பிக்காக, கண்களை மூடும் அக்காவின் வெட்டுண்ட தலை வாசிக்கையில் உள்ளூர ஒரு நடுக்கம்.
அக்காளின் எலும்புகள் தட்டுப்படுவதையும், முகூர்த்த புடவை எத்தனை வண்ணங்களில் எரிந்தது தெரியுமா என்று கேட்பதையும், கண்ணீர்த்துளி சொட்டவும் ஆனந்தம் பெருகுகிறது குருதியாய் என்பதையும் நெஞ்சின் அடியாழத்து கத்திக்குத்தென வாசகருக்கு கடத்தியிருக்கிறார் வெய்யில். பனை மரங்களின் வாசனை, புழுதியின் வெம்மை எல்லாம் கவிதையினூடே காட்சியாய் விரிந்து கொண்டே வருகிறது.
எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம் என்ற வெய்யிலின் வரிகள், தாமிரபரணியில் பாய்ந்து செல்வது அக்காள்களின் செந்நீரும், கண்ணீருமே என்று அழுத்தமாய் உக்கிரமாய் சொல்கின்றன.
- ரஞ்சனி பாசு
5 நிச்சயம் படிக்க வேண்டியது
#அக்காளின்_எலும்புகள் #வெய்யில் அக்காள் அல்லது அக்காள்கள் , பெண் அல்லது பெண்கள் இது தான் இதற்கு சரியான பொறுத்தம் ஒரே ஒரு ஆண்குறியும் அதன் ஆதிக்கமும் அத்தனை அத்தனை கணக்கிடலங்கா வன்மத்தை சக உயிரின் மீது உமிழ்கிறது அல்லது உமிழ்ந்து வைத்துள்ளது முளை புடைத்த நாள் முதல் எத்தனை முறை அதனை முறைத்தவனை முறைத்திருப்பார்கள் . பெண் எனும் சொல்லுக்கு எத்தனை வளையம் , அதில் சொட்டும் இரத்தம் , அதன் கீழ் தொங்கும் ஆண்குறி சாவி . திருமணம் , மறுமணம் இதில் விரும்பியது , இடைச்செருகியது , திணித்து வாயில் அடைத்து உயிர்விட்ட பிறகும் அதே வாயில் மற்றுமொன்றே அடைப்பது என முடிவுகள் அனைத்தும் ஆண் எனும் சமூகத்தின் அப்பாவோ, அண்ணணோ ,தம்பியோ யாரோ ஒரு ஆணின் சமூகத்தின் வழியே ஒடுக்குவது. சுதந்திரமாய் பறக்க நினைத்தால் சுற்றி நின்று அவள் உடலை உண்பது , தின்ற மிச்சத்தையாவது விட்டு செல்பவர்களா என்றால் அதனை வாசலில் நிற்கும் அத்தனை ஆண்குறிக்கும் விருந்திடுவது . விருந்தாக்கி விடுவார்களா என்றால் இறுதியில் அவளே பகிர்ந்தால் என கூவிச் செல்வது . எழுதி தீர்க்க ஆயிரம் வரிகள் இருந்தாலும் எழுதிச் சொல்லி தீர்க்க முடியா உண்மைகள் ,நியாயங்கள் அத்தனையும் அக்காள்களை போன்ற அத்தனை பெண்களுக்கும் அதனை பாதுகாக்கிறோமென புழுகும் ஆண்குறிகளுக்கும் இந்த புத்தகத்தின் பக்கங்கள் தீரா அனைவரும் வாசிக்க வேண்டிய கனத்த வலி மிகுந்த புத்தகம் இத்தகைய படைப்புக்கு நன்றியும் , வணக்கமும் இப்புத்தகம் எளிதாக புரிந்திட எனதளவில் எட்டிய யோசனை எங்கெல்லாம் அக்கா சொல் வருகிறதோ அங்கெல்லாம் அவள் அல்லது பெண் என மாற்றி படியுங்கள் #அமாசே
magimai xavier 30-08-2020 09:27 am
5
Surendran R 18-03-2020 10:13 pm