அக்பர் தம்முடைய பதின்மூன்றாவது வயதில் அரியனை ஏறினார். தனது சொந்த முயற்சியில் பேரரசரானதும் தமது அரசைப் பேரரசாக்கியதும் ஒரு அருஞ்சாதனை என்றே சொல்ல வேண்டும். அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை அக்பருக்கு முன்போ, பின்போ எவரும் நிறுவியதில்லை. ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அதைக் கட்டிக் காக்கவும் செய்த வல்லமை பொருந்திய நிர்வாகி அவர். அக்பர் ஆண்ட காலமே முகலாய ஆட்சியின் பொற்காலம் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது. தனி நபர் என்கிற முறையில் அக்பரின் வாழ்க்கை முறையும் சரி, ஆட்சியாளராக அவர் மேற்கொண்ட சமூக சீர்திருத்தங்களும் சரி, இன்றைய அரசியல்வாதிகளிலிருந்து சராசரி மக்கள் வரை அனைவரும் அவசியம் கற்றுணர்ந்து பின்பற்ற வேண்டியவை ஆகும் என்று இந்நூலின் ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Be the first to rate this book.