யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் 1950-ல் பிறந்த புஷ்பராணி. ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும். தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற இரு பெண் போராளிகளில் ஒருவர்.
1986-ல் இலங்கையிலிருந்து வெளியேறிய புஷ்பராணி தற்போது பிரான்ஸில் வசிக்கின்றார். ஈழப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களும், வெவ்வேறு வரலாறுகளும் முன் வைக்கக் கூடிய காலகட்டமிது. இதந்கான பெரும் விலையையும் பேரிழப்புகளையும் தந்துவிட்டே, மனித சமூகத்தின் இந்த அடிப்படை உரிமையை தமிழ்ச் சமூகத்தினுள் மாற்றுக் கருத்தாளர்கள் பெற்றிருக்கக் கூடிய சூழலில் தோழர் புஷ்பராணியின் ஈழப் போராட்டத்தில் தனது பங்களிப்புகளின் நினைவுப் பகிர்மானங்கள் ஒரு பகுதி வரலாறாக நமது கவனத்தை ஈர்க்கின்றன.
போரின் தீவிரமும் ஒடுக்குமுறைகளும், போரில் பங்கேற்ற பெண்கள் மட்டுமல்லாமல் மற்ற பெண்களையும் இன்று ஈழக்கிலும். புலம் பெயர் சூழலிலும் சிறந்த படைப்பாளிகளாகவும், இலக்கிய ஆளுமைகளாகவும் உருவாகியுள்ள போதிலும், வரலாற்றை எழுதும் போத்திலிருந்து விலக்கியே வைத்துள்ளது என்கிற குறைபாடுகளையும் துவக்கப்புள்ளியாக புஷ்பராணியின் ‘பெண்பாடு’களின் அனுபவப்பிரதி.
Be the first to rate this book.