நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் தேடி மனிதர்கள் காலந்தோறும் ஓடியபடியே இருக்கிறார்கள். அவர்கள் சரணடைகிற புள்ளிகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்துப் பெரிய வட்டங்களாக மாறியபடியே இருக்கின்றன.
மதங்களைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிற இந்த நாவல், எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து அலையும் ஒருவனின் வாழ்க்கையை அதன் அர்த்தங்களோடு முன்வைக்கிறது. மனிதர்கள் எப்போதும் தன்னை மீட்டெடுக்கிற ஒரு கையைத் தேடித்தான் காடு மலை கடந்தலைகிறார்கள்.
அஜ்வா என்பது ஓர் ஆழமான விருப்பம். ஆழமான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை என்கிற மந்திரக் கையொன்று, வீழ்ச்சியின் குவியலொன்றுக்குள் இருந்து ஒரு பிஞ்சுத் தலையை மீட்டெடுத்த கதை இது. பயங்களை வெல்ல நினைப்பவர்களுக்கான சாவியை இந்நாவலின் வழியாகப் படிப்பவர்களின் கைகளுக்குக் கடத்துகிறார் சரவணன் சந்திரன்.
Be the first to rate this book.