அஜ்வா- ஓர் அனுபவம்தான். மறுப்பதற்கில்லை. அந்த ஒற்றை அனுபவத்தை நம்முள் கடத்துவதற்கு நாவலாசிரியர் பல உலகங்களை அறிமுகப்படுத்துகிறார். வேற்றுகிரகத்திலிருந்து எவரும் குதித்துவிடவில்லை. எல்லோரும் நம்முடன் பயணிப்பவர்களே. நாவலின் முதல் எழுத்திலிருந்து கதையைத் தொடங்கிவிடுகிறார் கதையாசிரியர். ஆனால் இதுதான் கதையென்று நம்மை முடிவு செய்யவிடாமல் அவர் செய்யும் மேஜிக், ஆச்சர்யம். இப்படித்தான் எழுதவேண்டும் என்ற சமரசங்களுக்கு உட்படாத எழுத்து. தனக்கான எழுத்து நடையை நன்றாகவே தீர்மானித்திருக்கிறார் சரவணன் சந்திரன். பின்விளைவுகள் குறித்து அலட்டிக்கொள்ளாத எழுத்து. ஏதோ ஒரு பத்தியில் வாழ்வின் நிலையாமையை, அபத்தத்தை, அற்புத தருணத்தை எளிதில் கடத்திச் செல்பவர் அடுத்த பத்தியில் நம் தோளில் கை போட்டு 'ஒரு டீ சாப்பிடலாமா நண்பா' என்கிறார்.
Be the first to rate this book.