வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப் போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.
Be the first to rate this book.