குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது.
குற்றத்தின், தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை. அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை. ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்த கதைகளில் உள்ளன. அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள். எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன
Be the first to rate this book.