தொல்காப்பியம் சொல்லும் முந்நீர் வழக்கத்தை அடியொற்றி, அதே சமயம் அது காட்டிய விதிகளை மீறி புதுவிதமான ஆட்டத்தைக் கடல் கடந்து ஆடிப் பார்க்கும் புதிய தலைமுறையின் கதை.
மாய முதலை ஆடும் பகடையாட்டத்தில் சிக்கிக்கொண்ட தலைமுறையின் தாகத்தை நவீன வணிகத்தின் வழியாக விரித்தெடுக்கும் இந்தக் கதை, பல்வேறு நிலங்களின் வழியாகப் பல்வேறு மனிதர்களைக் காட்சிப்படுத்துகிறது. முதலைகளின் வாய், நிலங்கள் கடந்த தோற்றக் காட்சிகளையும் வாழ்வின் எத்தனங்களையும் காட்டித் தருகிறது.
மனிதர்களின் கால்படாத தேசங்களில் கொட்டிக் கிடக்கிற எண்ணெய்க் கிணறுகளையும் தங்கங்களையும் வைரங்களையும் தேடிப் போகிற வணிக யாத்திரீகர்களின் கதை.
மந்திரக் கற்களை வைத்து ஆடிப் பார்க்கிற ஆடுபுலி விளையாட்டில் சிக்கிக்கொண்ட சாமானியனின் கதையும்கூட. தன் வாழ்வையே பணயமாக வைத்து ஆடும் சூதாடியின் நாட்குறிப்புகளின் வழியாகப் பரந்த நிலக் காட்சிகளை வரைந்து செல்கிறார் சரவணன் சந்திரன். கடல் கடந்த தமிழ் வணிகத்தின் விதிகளை மீறிய நீட்சியைப் பதிவு செய்கிறது இந்நாவல்.
Be the first to rate this book.