தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயர்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் இதுவரை சொல்லப்படாத நிலங்கள், நாடுகள் வழியே ஒரு புதிய கதையைச் சொல்கிறது. செல்வத்தையும் அதிர்ஷ்டட்தையும் தேடி புதிய தடங்களில் பயணம் செய்யும் மனிதர்களின் சவால்களும், தன்னையே பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டங்களும் இந்த நாவலை மிகுந்த சுவாரசியமுடையதாக்குகின்றன. மனிதர்களின் ஆழம்காண முடியாத மனோவிசித்திரங்களை சரவணன் சந்திரன் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறார்.
Be the first to rate this book.