மேலும் சொல்கிறேன் கேள், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனி நாடு பூமியில் தானே மலரும். அது அடுத்த ஆண்டில் மலரலாம், அடுத்த நூற்றாண்டிற்கும் தள்ளிப்போகலாம். தமிழர்கள் செய்யவேண்டியது, நாக்கை மடித்து ழகரத்தை உச்சரிக்க முயல்வதே. உனக்கு ஒரு மொழியியல் ரகசியத்தைச் சொல்கிறேன், உன் மாணவர்களிடம் அதைப் பரப்பு. ழகர உச்சரிப்பை மையமாகக்கொண்டு பிரெஞ்சு மொழி இயங்குகிறது.
அதனால்தான் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் பாலுறவு நாட்டம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். அதேபோல் தமிழ் மொழியும் ழகரத்தை மையமாகக் கொண்டதே. அதனால்தான் திருக்குறள் பாலியலை ஓர் அறமாகப் போதிக்கிறது. ழகரத்தை ஒழுங்காக உச்சரிக்கும் ஆணும் பெண்ணும் உடலுறவில் செம்மையாகச் சிறந்து விளங்குவர். ழகரத்தைச் சரியாக உச்சரிக்கத் தெரியாதத் தமிழ்ப் பையனைக் கூடும் பெண் உச்சத்தைத் தொடுவது முயற்கொம்பாம்.
- ரமேஷ் பிரேதன்
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.