உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ.
பவுலோ கோய்லோ பிரேசில் நாட்டில் பிறந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளர். 1947 ஆகஸ்ட் 24 ஆம் நாளில் பிறந்த இவருக்கு இந்திய சுதந்தரத்தின் வயதாகிறது.
முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ரசவாதி அவரை உலக எழுத்தாளராக மாற்றியது. அதன் விற்பனை உலக மொழிகள் பலவற்றிலுமாக விரிவுற்றபோது வாழும் எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு என்ற அளவில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியது.
ஐந்தாம் மலை என்ற இந்த நாவல் விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது.
பவுலோ கோய்லோ வாசகனை மெல்ல மெல்லத் தன் புனைவுகள் வழி சிந்திக்க வைப்பதைக் கலையாக மேற்கொள்கிறார்.
இந்தத் தத்துவப் பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் முனைவர் ச. வின்சென்ட். ஆங்கிலப் புலமையும் தமிழில் திறனும் பெற்ற பேராசிரியர் வின்சென்ட் புகழ்பெற்ற பல நூல்களை ஆங்கிலம் வழி தமிழுக்குத் தந்த பெருமைக்குரியவர்.
மதுரை அருளானந்தர் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பரமார்த்த குருவின் கதை, பிரதாப முதலியார் சரித்திரம் ஆகிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஃப்ராய்ட், ஸ்டீபன் ஹாக்கிங் வரலாறுகளைத் தமிழில் தந்திருக்கிறார். வான்காரி மத்தாய், சினு அச்பி, சிகோமெண்டிஸ் ஆகிய புகழ்வாய்ந்த எழுத்தாளர் நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 32 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். பாலோ கொயலோவின் தலைசிறந்த நூலான ‘ரசவாதி’ மற்றும் ‘வில்லாளன்’ ஆகிய நூல்கள் ஏற்கனவே மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீட்டில் தமிழில் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.