பல நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஒர் அமைப்பு ஜக்கிய நாடுகள் சபை. உலக மக்களின் பாதுகாவலன் என்னும்
அடையாளமும் அதற்கு உண்டு. ஜ. நா.வின் ஆச்சரியமூட்டும் செயல்பாடுகளை எளிமையாக விவரிக்கிறது இந்நூல். ஜம்பது
உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஜக்கிய நாடுகள் சபையில் இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.பொதுச்சபை,
பாதுகாப்பு கவுன்சில், பொருளாதார சமூக கவுன்சில், செயலகம், சர்வதேச நீதி மன்றம் என்ற பிரிவுகளில் ஜ.நா.இயங்கி வருகிறது. இவை தவிர,உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப் போன்ற துணை அமைப்புகளும் ஜ.நா.மூலம் இயங்கி வருகின்றன. உறுப்பினர் நாடுகளுக்குள் போர் வராமல் தடுப்பது, ஏழைமையில் இருக்கும் நாடுகளுக்கு நிதி அளிப்பது, சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வது என்று பல்வேறு செயல்பாடுகளை உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி இயங்கி வருகிறது ஜ.நா.
Be the first to rate this book.