சொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.
சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. சிலருக்கு வாழும்போதே. சிலருக்கு இறந்தபின். இந்நாவலில் வரும் பத்திரிகையாளரைப் போலவே. கொலையா, தற்கொலையா என்று ஊகிக்க முடியாத மரணம் அவருடையது.
நினைவுகளை, கேள்விகளை, புதிர்களை மிச்சம் வைக்காமல் எந்த ஒரு மரணமும் இதுவரை நிகழ்ந்ததில்லை. முற்றிலுமாக எரித்தபின்பும் சாம்பலை மிச்சம் வைக்கிறது அக்னி. வாழ்க்கை தீர்ந்துபோனால் மரணம் என்பது உண்மையெனில், இந்தப் பத்திரிகையாளருக்கு மட்டும் எப்படி இறந்தபிறகு தொடங்குகிறது வாழ்க்கை?
மென்மையான உரையாடல்கள். அழுத்தமான கதை. இ.பாவின் அரசியல் தொடாத மிகச் சில நாவல்களுள் ஒன்று இது.
Be the first to rate this book.