கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.
– சுகுணா திவாகர் (ஆனந்த விகடன் , ஜன.13, 2021)
தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வாய்ப்பை எப்படி வெற்றிகொள்வது என்பதற்கு ஏ.ஜி.கே. ஒரு முன்னுதாரணம்.
– செல்வ புவியரசன் (இந்து தமிழ் திசை – நூல்வெளி, ஜன.16, 2021)
ஏஜிகேயின் தீவிரப் போக்கு ஏற்புடையதா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும், பாசிசம் பெருகிவரும் நடப்புக் காலத்தில் இப்படியொரு புரட்சியாளர் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் பிறப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை அதுதான் ஏஜிகேவின் ஆளுமையோ!
– எழுத்தாளர் நக்கீரன்
கீழைத்தஞ்சை மண்ணின் வீரஞ்செறிந்த விவசாயத் தொழிலாளர் வீறெழுச்சியின், வெண்மணிப் போராட்டங்களின் களப்பணியாளரும் தளகர்த்தருமான, ஒருதனி வியத்தகு நிகழ்வின் பெயர்தான் தோழர் ஏஜிகே எனும் அந்தணப்பேட்டைகோபாலசாமி கஸ்தூரிரெங்கன். தன்னேரிலாச் சமராளியாய்த் தம் வாணாள் செகுத்த மகத்தான மக்கள் தலைவர் குறித்த அரிய ஆவணத் தொகுப்பு நூலே ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’.
மதிப்பீடுகள், அஞ்சலிக்குறிப்புகள், ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’- தன்வரலாற்று நூல் மீதான விமர்சனங்கள், தோழமைப் பகிர்வுகள், உறவுப்பகிர்வுகள், பின்னிணைப்புகள் என வகைப்படுத்தப்பட்ட. தொகுப்பு நூலாகும்.
- வே.மு.பொதியவெற்பன்
Be the first to rate this book.