ஒருசொல், ஒரு வாக்கியம், ஒரு கருத்து நம்முடைய சிந்தனைகளை எத்தகைய புரிதலுக்கு உட்படுத்துகின்றன என்பதுபற்றி யுகபாரதி எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இசையையும் இலக்கியத்தையும் அவற்றின் பின்னணிகளுடனும் அரசியலுடனும் அலசியிருக்கிறார். இதுவரை தமிழிலக்கியச் சூழலில் இவ்விதமான பார்வைகளுடன் வெளிவந்துள்ள பதிவுகளில் இவை முக்கியமானவை. காதா சப்த சதி, பள்ளு இலக்கியம், முனாஜாத்துகள், குஜிலிப்பாட்டுகள் என இலக்கியங்களை அவருக்கே உரிய திசையிலும் நடையிலும் விவரித்திருக்கிறார். இளையராஜா, டி. ராஜேந்தர் ஆகியோரின் பாடல்களை அவர் வழியே தரிசிப்பது புதிய அனுபவத்தை வழங்குகிறது. மலையாளக் கவி குஞ்ஞுண்ணி மாஸ்டரும், பாடலாசிரியர் மருதகாசியும் யுகபாரதியின் வார்த்தைகளில் மேலும் அழகாகத் தெரிகின்றனர். இலக்கியத்தையும் இசையையும் நயத்துடன் நமக்குள் கடத்தும் யுகபாரதியின் ஆகச்சிறந்த உரைநடை நூல்களில் இதுவும் ஒன்று.
Be the first to rate this book.