நாட்டுப்புற கதைகளையும், பாடல்களையும், கலைகளையும் ஆய்ந்துரைக்கும் வகையில் அமைகிறது இந்நூல். நாட்டுப்புறக் கலை சமூக வாழ்வின் அடையாளமாக விளங்குவதையும், மக்களின் ஒட்டுமொத்த ஆசை வெளிப்பாடாக விளங்குவதையும் சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டுப்புற வழக்காறுகள் குறித்தும், கணியன் ஆட்டம் குறித்தும் கதைகளில் பாலியல் குறித்தும், கர்நாடகத்தில் முருகன் வழிபாடு குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மதம் சார்ந்து, இஸ்லாமியப் பாடல்கள், என்ற நிலையிலும் ஆய்ந்துள்ளது.
ஏட்டிலக்கியத்திலும், புராணவியலிலும் நாட்டுப்புற வழக்காற்றியல் கூறுகள், விடுதலைக்கு பின் கதைப்பாடல் ஆய்வு என்றெல்லாம் ஆய்ந்துரைத்துள்ளது. கலைகளின், வழக்காறு பெருமையை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பல்வேறு மத, சமூக அடையாளமாக கலைஞர்கள் விளங்குவதை அறிய முடிகிறது. நாட்டுப்புறவியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறும் வகையில் அமைந்துள்ள நூல்.
Be the first to rate this book.