கவிஞர் ந.சிவநேசன் 140 ஹைக்கூக்கள் கொண்ட கவிதைத் தொகுப்பை மலர் தேடி சிறகடிக்கும் தேனீ துளித் துளியாய் சேகரிக்கும் தேனைப் போல சிறப்பான ஓவியங்களோடு கோர்த்திருக்கின்றார்.
ஹைக்கூவின் இலக்கணம் மீறப்படாமல் அத்தனையும் ஒன்று போலவே நுட்ப வெளிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
அன்றாட வாழ்வின் இரசனை சார்ந்த பல்வேறு பரிமாணங்கள் இவரது பார்வையில் ஆழமும் சுவையுமாய் மூன்றே வரிகளில் பூத்துக் குலுங்குகின்றன.
இயற்கை குறித்த அழகியலையும் தவறவிடக் கூடாத மனித வாழ்வின் காட்சிப் படிமங்களையும் பேசியிருக்கும் இந்த ஹைக்கூக்கள் வாழ்வியலின் சிறுசிறு அபூர்வத் தருணங்களை நோக்கி நம்மை ஈர்க்கின்றன.
-மனோஹரி
Be the first to rate this book.