“யுத்தம்–பஞ்சம்–நோய்–தொழுகை” என்கிற நான்கிற்குள் பந்தாடப்படும் ஆப்கன் மக்களின் அழுகுரல் எப்போது ஓயும்? தன்னைத்தானே ரட்சகனாய் அறிவித்துக்கொண்ட அமெரிக்கா தற்போது ஆப்கன் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடுவது ஏன்? இதுவும் அவர்களின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தானா? பெருமளவு இரத்தம் சிந்தாத மாற்றம் என மேற்கத்திய ஊடகங்கள் முழங்குவது ஏன்? இடையில் என்ன நடந்தது?
அமெரிக்காவும் திருந்தி நல்ல பிள்ளையாகிவிட்டது; தாலிபானும் திருந்தி யோக்கியமாகிவிட்டது என நம்ப முடியுமா? ஆப்கனின் எதிர்காலம் பற்றி ஏதாவது ஆரூடம் சொல்ல முடியுமா? இப்படி எழும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அல்ல; விடைகளைத் தேடும் முயற்சியே விரிவாக்கப்பட்ட இப்பதிப்பு.
Be the first to rate this book.