கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிகம் பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே. அவற்றின் வழியாக உணர்த்தப்படும் நீதி, மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.
Be the first to rate this book.