இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது.
உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது.
தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே நிரூ பிக்கப்பட்ட, எளிமையான வெற்றிமுறைகள்!
நம்பமுடியாத அளவுக்கு பிரமிப்பும் வியப்பும் ஊட்டும் உதாரணங்கள். படிக்கிற சிரமமே இன்றி குதிரையோட்டம் ஓடும் ரூமியின் பண்பட்ட எழுத்து நடை.
ஆம்பூர் மஜ்ஹருல் உலும் கல்லுரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்கனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வெற்றிப் பாதையை அடையாளம் காட்டும் பணியில் இருக்கும் ரூமியின் இந்நூல், அவாது 25 ஆண்டு காலப் பேராசிரியர் பணியின் அனுபவச்சாறு.
Be the first to rate this book.