அக்பர் க்க்கட்டில் எழுதிய ‘வரூ, அடூரிலேக்கு போகாம்’ என்னும் மலையாள நூலின் தமிழாக்கம் இது. இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால அடூர் வாழ்க்கை, குடும்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை, திரையுலக அனுபவங்கள், தனது திரைப்படங்கள், சக கலைஞர்கள், இலக்கியவாதிகள் குறித்த அபிப்ராயங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த பார்வைகள் என ஒரு கலைஞனின் மனிதனின் சகல பரிமாணங்களையும் அவர் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வித்தியாசமான இந்நூலில், அடூரின் திரைப்படங்கள் குறித்த நூலாசிரியரின் விமர்சனங்களும் படக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.