இறைவனின் அடியும் மூடியும் காண இயலாதென்பது நம்பிக்கை. இறைவன் படைத்த எதனையும் எல்லை காண இயலாதென்பது உட்பொருள். இடையறாமல் முயன்றால் எப்பொருளாயினும் எல்லை காணலாம் என்பது ஆராய்ச்சி.
‘காலத்தோடு கற்பனை கடந்த’ கடவுளை வாழ்த்தும்போது காலத்தின் சாயல் படியாத கற்பனை இல்லை. கடவுளும் காலத்தைக் கடக்கவில்லை.
ஆதிகவி வான்மீகி முதல் அண்மைக்காலப் புனைகதையாசிரியர் வரை அகலிகை கதையைத் தத்தம் காலத்தில் நின்று அணுகியுள்ளார். இக்கதைகளினூடே மாறிவரும் கற்புநெறியைக் காணமுடிகிறது. இவ்வாறெல்லாம் கோட்பாட்டுக் கண்கொண்டு கைலாசபதி தமிழிலக்கியத்தில் காணும் சில கருத்து மாற்றங்களை இந்நூலில் அலசி ஆராய்ந்துள்ளார்.
Be the first to rate this book.