சுஷில் குமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார்.
இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 'மூங்கில்' மற்றும் 'சப்தாவர்ணம்' யாவரும் பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கின்றன.
இது 12 சிறுகதைகளை உடைய மூன்றாவது தொகுப்பு. சுஷில் குமாரின் கதைகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் மட்டும் வேரூன்றிய மாந்தர்களின் நம்பிக்கையை, பயத்தை, மீட்சியை, அலைகழிப்பை அவற்றின் இயல்பிலேயே சொல்லிப் போவதாகத் தோன்றலாம். சில சமயங்களில் அதீதங்களின் வெளிப்பாடாகவும் தெரியலாம். ஆனால் அவரது கதையுலகின் பாதாள நதியின் ஈரம் ஒரு பெரும் சமூகத்தின் வெவ்வேறு நிலங்களை நனைத்தபடியே செல்வதை கண்டடைய முடியும். கதவில்லா கூண்டை தேர்ந்தெடுக்கும் பறவையின் சுதந்திரத்தை கைக்கொள்ளும் அந்த ஈரமே சுஷில் குமாரின் கதைக்களமாகத் திகழ்கிறது.
Be the first to rate this book.