ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்துநிலையாளர். செயல்பாட்டாளர். ஆய்வாளர். தமிழகத்தின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். சிக்கலான கோட்பாட்டு முட்டுச் சந்துகளில் நின்றுவிடாமல், தமிழகத்தின் மக்கள் இயக்கங்கள் முகம்கொடுக்கும் சிக்கல்களை மனதில்கொண்டு அவரது ஆய்வுப் பயணம் தொடர்ந்து செல்கின்றது. இப்படிப்பட்ட அவர் இந்நூல் மூலம் அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வுமுறையியலைத் தமிழக வரலாற்று எழுதியலுக்குக் கையாள்வதன் வழி புதிய வெளிச்சங்களைக் காட்டுகின்றார். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதிய சிந்தனை ஊற்றுகள் பொங்கும் தளங்களாகத் தரிசிக்க வைக்கின்றார். பிழைகளைக் களைந்து புதிய செம்மையான பதிப்பாக வரும் இந்நூல் தமிழக வரலாற்றைக் கற்க விரும்புவோர்க்கான அரிய பெட்டகம்.
Be the first to rate this book.