தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். 2001 செப்டம்பர் 11அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத் தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவின் செயல்பாடுகள்தான் இவற்றுக்கு காரணம் என்றால் மிகையல்ல. தாரிக் அலி அதற்கான காரணங்கள் குறித்தும் வரலாறு,கலாச்சாரம் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
Be the first to rate this book.