ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே பரவியது என்பதற்கும் ஆதாரமாக இருப்பது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடந்த அகழாய்வுகளே. அதை ஆய்வு கண்ணோட்டத்தில் "தோண்டி" எடுத்து தமிழ் இனத்தின் பெருமையை இந்த நூலில் ஆசிரியர் அமுதன் பறைசாற்றி இருக்கிறார்.
ஒரு பல்கலைக் கழகம் குழு அமைத்து ஆற்ற வேண்டிய பெரும் பணியை தனி மனிதராக ஆற்றி இருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமே என்பதை இந்தநூலின் ஒவ்வொரு பக்கமும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
தினத்தந்தி ஞாயிறு மலரில் 49 வாரங்கள் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பை பெற்ற தொடர். இப்போது அழகிய வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நூல் வடிவம் பெற்றுள்ளது.
"இந்த நூலை அறிவுலகம் மகிழ்ந்து பார்க்கும்; ஆராய்ச்சி உலகம் வியந்து பார்க்கும். ஒரு தவத்தைப்போல இந்தத் திருப்பணியை மேற்கொண்ட ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இந்த அரிய நூலை அழகுறத் தந்த தினத்தந்திக்கு என் வாழ்நாள் வணக்கம். என்று அணிந்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
அமுதன்
மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம். தனசேகரன். 'தினத்தந்தி' செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை, 'கலாம் ஒரு சரித்திரம்' என்ற பெயரிலும், தஞ்சைப் பெரிய கோவில் பற்றி 'ஆயிரம் ஆண்டு அதிசயம்' என்ற பெயரிலும், எகிப்தின் பிரமிப்பூட்டும் பிரமிடுகள் பற்றி 'புதையல் ரகசியம்' என்ற பெயரிலும், இந்தியாவில் பழங்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் விஞ்ஞானம் உள்பட பல துறைகளில் நிறைந்த அறிவு பெற்று இருந்தார்களா என்பது குறித்து, 'பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்' என்ற பெயரிலும், இவர் எழுதிய புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.