பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நிலத்தை இலாப வேட்டைக்கும் பேராசைக்கும் தாரைவார்க்கின்ற கதைகள் சமகாலத்தின் அன்றாடச் செய்திகள். இன்றைய உலக ஒழுங்கின் மாபெரும் சதுரங்கப்பலகையில் எவரெவரதோ ஆட்டங்களுக்காக எதற்கு வெட்டப்படுகிறோம் என்றே தெரியாமல் வெட்டப்பட்டு வீழும் மதிப்பற்ற வெறும் காய்களான மக்களது உள்ளத்தினை சம்பூர் வதனரூபனின் இக்கவிதைகள் சிறிதளவிலேனும் பதிவு செய்ய முயன்றிருக்கின்றன.
Be the first to rate this book.