இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படும் பஞ்சபூதங்களோடு இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள்,தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதமா? இந்த மருத்துவத்தால் எந்த அளவுக்குப் பலன் கிடைக்கும்? என்பதையும்,அக்குபங்சர் மருத்துவம் தொடர்பான பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் எம். முத்துக்குமார்.
'முறையாகக் கற்றுத்தேர்ந்த அக்குபங்சர் மருத்துவர்களிடம், நோய்க்குத் தகுந்த சிகிச்சையைச் செய்துகொண்டால், நிச்சயம் பலன் கிடைக்கும். இது உறுதி.
மாற்று மருத்துவ முறைகளில் அக்குபங்சர் மிகச் சிறந்தது' என்று சொல்லும் முத்துக்குமார்,தொடக்கத்தில் ஓர் அலோபதி மருத்துவர்.அக்குபங்சர் மருத்துவத்தின் 'தனித்தன்மை'யை உணர்ந்து, பிறகு அதைக் கற்றுத் தேர்ந்து,இன்று தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அக்குபங்சர் மருத்துவர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.இதுவரை, 2.5 லட்சம் பேருக்கு அக்குபங்சர் மருத்துவச் சிகிச்சை அளித்திருக்கிறார்.
Be the first to rate this book.