தாஜிமா ஷிஞ்ஜி-வின் ஐந்து கதைகள் அடங்கிய இப்புத்தகம், நம் எல்லோருக்கும் சொல்ல சில செய்திகளைக் கொண்டுள்ளது. பொருளாதார வளம் மாத்திரமே மனித வாழ்க்கைக்கு முழுமை தந்துவிடாது. இதற்கும் மேலான பல இலட்சியங்கள் உண்டு; அன்பு கலவாத பேராசை மனிதனின் ஆத்மாவைக் கொன்றுவிடும்; என்பன அச்செய்திகள்.
இப்புத்தகத்தில் உள்ள ஐந்து கதைகளும் மனித வாழ்க்கையின் பல அம்சங்களைச் சித்தரிக்கின்றன. விவேகமும் தீர்க்க திருஷ்டியும் நிறைந்த இக்கதைகளை எழுதிய ஆசிரியரிடம் நிறைந்த மென்னுணர்வு, ஆழ்ந்த பரிவு, நாம் தீவிரமாக ஈடுபடும் செயல்களில் தவறானவை சில பற்றி விழிப்புணர்வு ஆகிய குணங்களைக் காணலாம்.
Be the first to rate this book.