எனது கவிதைகளை பாதிப்புகளில் இருந்து அல்லது தாளா துயரிலிருந்து பிரித்தெடுக்கிறேன், இந்த நிலமும், செய் தொழிலும் என இரு தளங்களில் நிகழும் பாதிப்புகளை முந்தைய மற்றும் இத்தொகுப்பில் சொல்லியிருக்கிறேன், விளிம்பு நிலை மக்களுடனான இவ்வாழ்வு, நோய்மையில் உழலும் மக்களுடனான நாட்கள், கலாச்சார மாறுதல்களில் திமிரும் இந்நிலப்பரப்பின் பயணங்கள், நெய்தலுக்கும் மருத நிலத்திற்கும் இடையேயான கோட்டில் வசிப்பது தான் இதை சாத்தியமாக்குகிறது கவிதைகளை தீர்மாணிக்கின்றது, ஒரு வகையில் கவிதை என்பது இந்த வாழ்வின் நிரம்பாத பாத்திரங்களை நிரப்பும் மழை, வாழ்வின் இழப்புகளை நேர்செய்ய எனக்கிருக்கும் ஒரே வழியும் கவிதைகள் தான்.
Be the first to rate this book.