கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுதந்திரமான போக்கில் எழுதப்பட்டவை இவை.
இந்த புனைவல்லாத எழுத்துக்களின் சிறப்பு, அவை முற்றிலும் மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பேசுபொருளாகக் கொண்டவை என்பதே. இதில் இடம்பெறும் மனிதர்கள் பெரும்பாலும் விசித்திரமானவர்கள் அல்லது அவர்களுக்கு வாய்க்கும் சூழல் விந்தையானது. இந்த விசித்திரர்கள் இயல்பான நடைமுறையை எப்படி விநோதமானதாக மாற்றுகிறார்கள் என்றும் விந்தையான சூழல், எளிய மனிதர்களை எவ்வளவு அபூர்வமானவர்களாக மாற்றுகிறது என்றும் நெருங்கியும் விலகியும் பார்த்து நுட்பமாக தீட்டுகிறார் ஜானகிராமன். அவரது புனைகதைகள் தரும் வாசிப்பு இன்பத்தை இந்த புனைவல்லாத எழுத்துக்களும் அளிக்கின்றன. இவை அவரது கலை மேதமையின் சான்றுகள் கூட.
Be the first to rate this book.