லா.ச.ராமாமிர்தத்தின் உணர்ச்சிச் சித்தரிப்புகளைச் சாப்பாட்டுக்கும் இசைக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை நிரப்பும் முயற்சிகள் எனலாம். சுப்புடு இசையனுபவத்தைச் சாதாரணமாகச் சாப்பாட்டு அனுபவத்துடன் கலந்துவிடக் கூடியவர். சாப்பாடு உலகியல் அனுபவம் என்றால் இசை மீபொருண்மையியல் (Metaphysics) அனுபவம். லெளகீயத்தை மீபொருண்மையுடன் இணைத்து மேலெடுப்பதும், மீபொருண்மையை உலகியலுடன் இணைத்து அன்றாட அனுபவமாக ஆக்குவதும் லா.ச.ராமாமிர்தத்தின் நோக்கங்களாக உள்ளன.
- ஜெயமோகன்
Be the first to rate this book.