திருமணம் ஆகாத முதிர்கன்னியான மீனாட்சியின் பேச்சுமுறைக்குப் பின்னால் இருக்கும் அவளது வாழ்க்கைப் பின்னணியை அலசுகிற கதை சொற்களில் மிதக்கும் கனவு. நுட்பமான உளவியல் பிரச்சினைகளை வெகு லாவகமாக ஞானபாரதி கையாள்கிறார் என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தக்கதை.
சாதி மீறிக் காதலிக்கும் இரு மருத்துவர்களை ஓர் பிராமணக்குடும்பம் எப்படி பிரஷ்டம் செய்து தூக்கி எறிகிறது என்பதை உணர்ச்சிகரமாகச் சொல்லும் கதை ‘வரலட்சுமி நோன்பு’. சாதியைத் தூர எறிந்த இளைஞனின் ஆவேசம் கதை நெடுகிலும் ஒரு பின்னணி இசைபோலக் கூடவே வந்துகொண்டிருப்பது கதையின் பலம். சாதியைத் தூர எறிந்தாலும் சடங்குகளை எறிய அவனால் முடியவில்லை. அந்தச் சடங்கில் ஒன்றான வரலட்சுமி நோன்பையே மையச்சரடாக வைத்துக் கதையைப் பின்னி இருப்பது கதைக்கு வண்ணமும் வாசமும் சேர்க்கிறது.
Be the first to rate this book.