அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்த
பல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி
ஒரு தமிழ்ச் சாதனையே.
- ஜெயமோகன்
அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது.
காலமற்றது. தத்துவச் சுமையில்லாதது. வலியில்லாதது. நான் - இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும்.
- தேவதேவன்
Be the first to rate this book.