இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர். அறிவியலில் விண்ணைத் தொட்டாலும், பணிவில் மண்ணை’த் தொட்டே நடந்த பிரம்மிப்பின் பிதாமகன். யாருக்கும் தெரியாத ஒரு ஏழ்மைத் தெருவில் பிறந்து, சர்வதேசப் புகழை கணக்கின்றி பெற்ற வியப்பின் குறியீடு.
கர்வமில்லாத இந்த மனிதர் தமிழர் என்பதில், தமிழினம் கர்வம் கொள்ளும்.ஒரு மனிதர் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்க்கையால் வாழ்ந்து காட்டியவர். இவருடைய வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கும், இனி வருகின்ற தலைமுறைகளுக்கும் மிகப்பெரிய பாடம்.
மதங்களை, இனங்களை, மொழிகளை, எல்லைகளைத் தாண்டி கலாமின் புகழ் கல்வெட்டாய் நிலைக்கும். அவருடைய வாழ்க்கையின் படி வாழ்க்கையில் அவருடைய ஆத்மாவும் நமை வாழ்த்தும்.
இந்த நூல் கலாமின் அத்தனை பரிமாணங்களையும் ஒட்டு மொத்தமாய் அலசுகிறது.இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா என நம்மை விடாமல் கேள்வி கேட்க வைக்கிறது. இது வெறும் வாழ்க்கை வரலாறு அல்ல, மக்களுக்கான வாழ்வியல் கையேடு.
Be the first to rate this book.