ஒரே இரவில் சாதனையாளராக மாறிவிட வில்லை அப்துல் கலாம். மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து, தன் திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டார் அவர்.
அப்துல் கலாமுக்கு நிறைய கனவுகள் இருந்தன. அறிவியல் ரீதியாக இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துவிட வேண்டும். பலம் பொருந்திய நாடாக வளரவேண்டும். ஏழைமை ஒழிய வேண்டும்.
கனவு மட்டும காணவில்லை அவர். தன்னால் முடிந்ததை நாட்டுக்குச் செய்யவேண்டும் என்னும் உத்வேகத்துடன் மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். இன்று, இளைய சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாக அப்துல் கலாம் கொண்டாடப்படுகிறார்.
பிரமிப்பூட்டக்கூடிய எளிமை. கைகூப்பச் சொல்லும் விஞ்ஞானத் திறன். குடியரசுத் தலைவரான பின்பும் மக்களைவிட்டு விலகாத பாங்கு. கலாமின் வாழ்க்கை கண்டிப்பாக ஒரு பாடம்.
Be the first to rate this book.