'எப்பப் பாரு டிவி இல்லன்னா கண்ட கண்ட பத்திரிக்கையைப் படிக்கிறது. உருப்புடுவியா நீ?' கண்டிக்கிறார் அம்மா. 'இங்கல்லாம் உட்காரக்கூடாது, ஓடுங்கடா!' என்று அதட்டி விரட்டுகிறார் ஒரு தாத்தா. ஆழ்ந்து யோசித்தால்தான் அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியும்.
சமூகமும் ஊடகங்களும் மாணவர்களை எல்லா விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த நிகழ்வுகள் நல்லவிதமாகவும் மோசமாகவும் மாணவர்களைப் பாதிக்கின்றன. ஆழ்ந்து யோசித்தால்தான் எது நல்லது, எது கெட்டது, எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது என்பது புரியும். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.
Be the first to rate this book.