அறிவியலுக்கும் கலைக்கும் ஆன ருசுப்படுத்தும் இடைவெளி, கற்பனை என்னும் சுதந்திரம் இரண்டும் கலந்ததொரு கலவையான பெண் கவிஞர் / மருத்துவர் கௌரிப்ரியா. ஆழியின் மகரந்தம் - 360° கோணத்தில் அவரது நிலா சுழற்சியில் அவரது கோள்வட்டப்பாதையில் கடலை மடித்து மடித்து ஒரிகாமி செய்யும் சிறுமி தெரிகிறாள்.
கடல், வானம் எனப் பெரும் பரப்புகள் ஒரு புறம், நத்தைகள், நுண்ணோக்கியில் காணும் நுண்வடிவ உயிரிகள் மறுஎல்லையில் என வாழ்வின் விஸ்தீரணத்திற்கும் நுட்பத்திற்கும் இடையே ஊசல் அலைவை மொழியால் கடக்க எத்தனிக்கிறார் கௌரிப்ரியா. சொல்ல விழைவதற்கும், சொல்லப்பட்டதற்குமான விகசிப்பு, அர்த்தங்களைத் தூரவைக்கிற ஒளிவிலகலும் உண்டு.
Be the first to rate this book.