ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதுதான். குழந்தைகளுடன் நாம் உரையாடலை நிகழ்த்தும்போது, அவர்கள் உதிர்க்கும் தனித்துவமான மொழிகளை தவற விடுகிறோம். நம்முடைய பொதுப்படையான புரிந்துகொள்ளுதலை அவர்கள்மேல் திணிக்கிறோம். ஒழுக்கம், மரியாதை என்ற பெயரில் அவர்களின் தனித்துவமான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோம். அப்படி அல்லாமல் நாம் அனைவரும் குழந்தைகளை அவர்களின் சிந்தனைப் போக்கில் பேச விட்டுப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சுட்டி டைம்ஸ் கிடைக்கும். ஆழி, ஒன்றரை வயது முதல் 3 வயது வரையான காலகட்டத்தில் செய்த குறும்புகள், நான் கண்டித்தபோதும், அறிவுரை சொன்ன போதும் கொடுத்த பதில்களின் தொகுப்புதான் இந்த ஆழி டைம்ஸ். இதில் சில விஷயங்கள் சுவாரசியம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதில் குழந்தையின் மொழி இருக்கிறது. தனக்குத் தெரிந்த சில சொற்களை மட்டுமே வைத்துக்கொண்டு, குழந்தைகள் எப்படி சாமர்த்தியமாக பதில் அளிக்கின்றன என்று பார்ப்பதில் இருக்கும் இன்பத்திற்கு ஈடுஇணை ஏதுமில்லை.
- அராத்து
Be the first to rate this book.