பாவண்ணன், வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவங்களையும் இணைத்துப் பல்வேறு சிறு கதைகளைப் பற்றிப் பேசுகிறார். வாசிப்பனுபவம் சார்ந்த உரத்த சிந்தனையாக வெளிப்படும் இந்தப் பதிவுகள் புனைவு மொழியின் சுவையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வாசகரும் தனக்குப் பிடித்த படைப்புகளைத் தமது வாழ்பனுபவம் சார்ந்து மதிப்பிடவும் தொகுத்துக் கொள்ளவும் அவற்றின் அர்த்த தளத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் முடியும். வாசகர்களை குறிப்பாக இளம் வாசகர்களை புதிய புதிய இலக்கிய ஆசிரியர்களை நோக்கிப் பயணிக்கத் தூண்டுவது இக்கட்டுரைகளின் கூடுதல் சிறப்பு.
Be the first to rate this book.