‘தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே.’
— ஜெயமோகன்
‘தியானத்தின் நிலைக்கு கவிதை அனுபவத்தை நகர்த்தியவர்’ என்று விமர்சகர்களால் ஆழ்ந்து நோக்கப்படுபவர் அபி. சொல்ல முடியாததை (unutterable) சொல்ல முனைபவை அபியின் கவிதைகள். மௌனத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவரின் கவிதைகள் நிர்ணயங்களையும் துல்லிய வரையறைகளையும் நம்பாதவை. ‘தெளிவு’ என்பதை ஒரு பகட்டாக நினைப்பவை. இருளின் தீட்சண்யத்தில் கண்திறப்பவை.
Be the first to rate this book.