நான் தேடியதை கண்டடைந்ததை தர்க்கபூர்வமாக முன்வைப்பதற்கு பதிலாக கூடுமானவரை இலக்கியத்தின் வழியில் கவிதையினூடாக படிமங்களினூடாக முன்வைக்க முயன்றிருக்கிறேன். இலக்கியத்தைப்பற்றி எந்த ஆய்வும் எந்த உரையாடலும் இலக்கியமாகவே அமையவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அது ஒருபோதும் பகுப்பாய்வின் மொழியில் பேசலாகாது. பகுப்பாய்வுக்கு சிக்குவது ஒருபோதும் இலக்கியமாக இருக்க முடியாது. ஆகவே இவை ஒருவகையான கவித்துவ உரையாடலாக அமைந்தன. ஆய்வு தோரணை இவற்றுக்கு இல்லை. இலக்கியம் இவற்றிற்கு பின்னணியாக அமைந்த ஒன்றாக அமைகிறதே ஒழிய இலக்கியம் இவற்றின் பேசுபொருளாக இல்லை. இவை அகத்தேடலாக தன்னைக் கண்டடைதலாக ஒருவகையில் சமகாலத் தன்மை கொண்ட ஒரு தன்னிலையிலிருந்து என்றுமுள்ள ஒரு தன்னிலை நோக்கி நகரும் முயற்சியாக அமைந்துள்ளன.
Be the first to rate this book.