அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன என்பதை இந்த நாவலின் மூலம் காண முடிகிறது. அதே நேரத்தில் சிங்கள பேரினவாதத்தின் கொடூரத்தையும் மிகத் துல்லியமாகவே நாவல் பதிவு செய்துள்ளது. உல்லாசம், காமம், காதல், சாகசம், நெருக்கடி என மனித வாழ்நிலையின் பல்வேறு சுவராசியங்களையும் சுமந்தும், கடந்தும் நிற்கும் ஒரு இயக்கப் போராளியின் அனுபவங்கள் நிறைந்த இந்த நாவல் முழுமையானதல்ல என்றாலும் ஈழப் போர் குறித்த ஆவணப் படைப்புகளுள் ஒரு முக்கிய வரவு இந்த நாவல்.
Be the first to rate this book.