கற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும் வடிவம் மாறிவந்தாலும் பல காரணங்களால் நீண்டுகொண்டே வருகிறது. தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதம் செய்த மனிதன், நாடுகளைப் பிடிக்க ஆயுதம் செய்தான். இப்போது உலக நாடுகள் பல, தங்கள் நாட்டின் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள அணு ஆயுதம் எனும் விபரீத விளையாட்டில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றன. கல், மரம், இரும்பு என பல வகை ஆயுதங்களில் உலோக வகை ஆயுதங்களின் ஆயுள் அதிகம். அந்த உலோக ஆயுதங்களின் ஆதிக் கதையைச் சொல்கிறது இந்த நூல்.
கொங்கு எனப்படும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதியைப் பற்றி இந்திய வரலாறும் தமிழக வரலாறும் அவ்வளவாக எடுத்துரைப்பதில்லை.கொங்கு நாட்டுப் பகுதிகளின் உலோகங்கள்தான் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக விளங்கின என்பன போன்ற அறியப்படாத பல ஆச்சர்யத் தகவல்களைத் தருகிறது இந்த நூல்.
‘வானில் மிதந்து சென்று தாக்கும் ஆயுதங்களையும், பலவகை பீரங்கிகளையும், பெரிய அளவிலான கல் எறியும் கருவிகளையும் கொங்கில் பிற்காலச் சேரர்கள் உருவாக்கினர். இன்றைய விமானங்கள், ராக்கெட்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றின் ஆரம்ப கால வடிவங்கள் இங்குதான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.’ - இதுபோல இன்னும் பல அரிய தகவல்கள் இந்த நூலெங்கும் சொல்லப்பட்டுள்ளன. இந்த நூலைப் படித்த பிறகு கொங்கு நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் நமக்குப் புரியும். ஆயுத தேசத்தில் உறைந்துகிடக்கும் அமைதியான வரலாறைக் காணலாம் வாருங்கள்.
Be the first to rate this book.