இந்தத் தொகுப்பின் மொத்த உருவத்தை நெகிழ்ச்சியும் கருணையும் கொண்ட ஒரு யானையாக உருவகப்படுத்தலாம். ஒவ்வொரு கவிதையின் ஒவ்வொரு வரியிலும் நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சி, முழுக் கவிதையை வாசித்து முடிக்கும்போது உலகத்தின் மொத்த ஜீவராசிகளிடமுள்ள கருணையாக நமக்குள் பொங்குகிறது. உருவத்திலும் ஆளுமையிலும் நாம் எப்பேர்ப்பட்ட யானையாக இருந்தாலும் 'உலகம் என்பது இவ்வளவுதான்' என்ற புரிதலில் நெகிழ்ந்துபோய் எல்லோரிடமும் கருணை கொண்ட சமூக விலங்காக மாறிவிடுகிறோம். அதுவே இந்தத் தொகுப்பின் மிகப்பெரிய பலம்.
- வேல்கண்ணன்
Be the first to rate this book.