தற்சார்பாக இருக்க வேண்டிய சமூகம், வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதாராம் போன்ற அறிவுத்தனமான காரணங்களைச் சொல்லி நிறுவனங்களுக்கு அடிமையாகிப் போனது. அரசும், நிறுவனங்களும் இணைந்து நமது இயற்கைச் சூழலை அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றன. தனக்கான உணவுக்கும் நீருக்கும் கூட நிறுவனங்களைச் சார்ந்து, நோய்களுடன் சபிக்கப்பட்ட வாழ்வை வாழும் சமூகத்தை எந்த வளர்ச்சியும் நியாயப்படுத்த முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டிய உச்ச தருணம் இது. இவையெல்லாவற்றுக்குமான ஒரே தீர்வு மரபு நோக்கித் திரும்புதலே. அப்படியான மரபு சார்ந்த ஒரு சமூகத்தை எதிர்கால சந்ததிகளுக்காக எப்படி அமைப்பது, அதில் உள்ள சமகாலச் சிக்கல்கள், அவற்றை அணுகும் சரியான பார்வை மற்றும் வழிகள்.
தற்சார்பான வாழ்வியலை விரும்பி ஊர் திரும்புவோருக்கான பொருளாதாரத் தேவை குறைவாக உள்ளது. பொருளாதாரம் என்பது தனித்து இயங்கும் துறையல்ல. ஊர் திரும்பிய பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதளவில் உணர வேண்டும். எது உங்களது விருப்பமோ அதைச் செய்ய வேண்டும். சக மனிதர்களின் அறிவுரைகள், ஆசை அழைப்புகளுக்கெல்லாம் செவி சாய்க்கக் கூடாது. உங்கள் மனம் எதைச் சொல்கிறதென உற்றுக் கவனியுங்கள். அதுதான் உங்கள் பாதை.
Be the first to rate this book.