'பிரமிட்' என்று அழைக்கப்படுகிற முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடம் எகிப்து நாட்டில் உள்ளது. இது இதனுடைய கட்டுமானத்தினால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரமிட் எகிப்து நாட்டில் நைல் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய அளவுகளுள்ள சுண்ணாம்புப் பாறைகளைச் செதுக்கி எடுத்து வந்து கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மனிதர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையானதும் மிகவும் உயரமானதும், பெரிதானதுமாகக் கட்டப்பட்டவற்றில் பிரமிட் ஒன்றுதான் மிகவும் அதிசயமானதாகக் கருதப்படுகிறது.
Be the first to rate this book.